‘GENZ DMK’ கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் வாலண்ட் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நள்ளிரவு கைது விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பிக் பாஸ் புகழ் ஜூலி இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் வைத்து அன்பாநந்தன் அரியப்பனை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
கட்டாயக் கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!
இந்த நடவடிக்கைக்கு அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நேற்று சட்டப்பேரவையில் அத்துமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டிய ஜூலி, “நைட்டானதும் இப்படிப் பயந்து போய் நள்ளிரவில் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே! இதைப் பார்த்து நாங்கள் பயந்து பேசுவதை நிறுத்திவிடுவோம் என நினைக்காதீர்கள்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
நாட்டில் இவ்வளவு குற்றங்கள் நடக்கும்போது அதற்கெல்லாம் வாயைத் திறக்காமல், நடுராத்திரியில் ஒரு சாதாரணக் குடும்பத்தினரை மிரட்டி கைது செய்வது சரியா எனக் கேள்வி எழுப்பிய அவர், எங்களை அடக்குவதை விட்டுவிட்டு மக்களுக்காக உருப்படியாக வேலை பாருங்கள் எனத் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

