மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் ‘புதிய நடுவர் மன்றம்’ அமைப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு அதிமுக, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குடிநீர் தேவை என்ற பெயரில் புதிய அணை கட்ட கர்நாடகா முயல்கிறது. அதற்கு ஆதரவாக, திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கச் சொல்லி காவிரி மேலாண்மை ஆணையமும் செயல்படுகிறது. எனவே, அதன் மீதான நம்பிக்கையைத் தமிழகம் இழந்துவிட்டது.
கர்நாடகாவின் தந்திரத்திற்கு எதிராகப் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே தற்போதைய சிறந்த வியூகம். உச்ச நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தால், தமிழகத்திற்குச் சாதகமாகப் போதிய கால அவகாசம் கிடைக்கும். “காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்” என சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில், புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது கர்நாடக அரசின் வியூகத்திற்கு எதிரான தமிழக அரசின் முக்கியமான வியூகம் என்று சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “குடிநீர் தேவை என்ற பெயரில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடகாவிற்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது.
இதனால், அதன் மீது நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம்,” என்றார். மேலும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி புதிய நடுவர் மன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால், அது தமிழகத்திற்குப் போதிய கால அவகாசத்தைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

