தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் 4 குறிப்பிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!
மழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்களாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,
திருவண்ணாமலை என குறிப்பிட்டுள்ள இந்த 4 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பரவலாக லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

