Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!
    ஆரோக்கியம்

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mudavattu-kaal-kizhangu-benefits-joint-pain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொல்லிமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வளரக்கூடிய ஒரு அரிய வகை மூலிகைத் தாவரத்தின் வேர் முடவாட்டுகால் கிழங்கு. ஆட்டின் கால் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் இதற்கு ‘முடவாட்டுகால்’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மூட்டு வலி மற்றும் வாத நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த முடவாட்டுகால் மூலிகை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. முடவாட்டுகால் முக்கிய மருத்துவப் பயன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி நிவாரணி

    முடவாட்டுகால் எலும்புகளின் இணைப்புகளில் உள்ள மஜ்ஜை வறண்டு போவதைத் தடுத்து, மூட்டுகளின் இயக்கத்தைச் சீராக்குகிறது. உடலில் ஏற்படும் கடுமையான மூட்டு வலி, முழங்கால் தேய்மானம், மற்றும் கணுக்கால் வீக்கம் போன்றவற்றுக்கு முடவாட்டுகால் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.

    mudavattu-kaal-kizhangu-benefits-joint-pain

    வாத நோய்களைக் குணப்படுத்தும் முடவாட்டுகால்

    கை, கால் முடக்கம் மற்றும் வாதத்தினால் (Arthritis) ஏற்படும் பிடிப்புகளைக் குணப்படுத்தும் திறன் முடவாட்டுகாலுக்கு உண்டு. அதனால்தான் இதற்கு ‘முடவன்-ஆட்டு-கால்’ (முடங்கிப் படுத்திருப்பவரையும் ஆட்டி வைக்கும் கால்) என்ற காரணப் பெயரும் உண்டு.

    எலும்புகளை வலுவாக்கும் முடவாட்டுகால்

    முடவாட்டுகால் கிழங்கில் உள்ள கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. குறிப்பாக, நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்திற்கு முடவாட்டுகால் நல்ல பலன் தரும்.

    தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் குறைக்கும் முடவாட்டுகால்

    தசை நார்களில் ஏற்படும் பிடிப்புகள், உடலில் ஏற்படும் உள்வீக்கங்கள், மற்றும் அதிகப்படியான அலைச்சலால் ஏற்படும் கால் குடைச்சல் ஆகியவற்றை முடவாட்டுகால் உடனடியாகக் கட்டுப்படுத்தும்.

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஒற்றைத் தலைவலி

    முடவாட்டுகால் கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இதன் சாறு நாள்பட்ட ஒற்றைத் தலைவலியை (Migraine) குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    mudavattu-kaal-kizhangu-benefits-joint-pain

    பயன்படுத்தும் முறை

    முடவாட்டுகால் மேல் தோலில் உள்ள ஆட்டின் முடி போன்ற பகுதியைச் சீவி நீக்கிவிட்டு, நன்றாகக் கழுவி இடித்து, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சூப் செய்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வரலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Joint Pain Remedy Tamil Knee Pain Herbal Cure Kollimalai Herbs Mudavattu Kaal Kizhangu Mudavattu Kaal Soup Natural Bone Health Rheumatoid Arthritis Tamil எலும்பு தேய்மானம் தீர்வு கொல்லிமலை முடவாட்டுகால் முடவாட்டுகால் கிழங்கு முடவாட்டுகால் சூப் மூட்டு வலி மருந்து மூலிகை மருத்துவம் வாத நோய் குணமாக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.