வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திரை துறையில் முன்னணி நடிகையாக பார்க்கப்படும் த்ரிஷாவை பொறுத்தவரை அவருக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அவரது நட்பு லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில், அவர்களுள் முக்கியமானவர் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி.
கருப்பு திரைப்படத்தை கூட முதல் நாள் முதல் காட்சியில் அர்ச்சனாவும், த்ரிஷாவும் தான் ரோகிணி திரையரங்கில் பார்த்தார்கள். ஏகப்பட்ட முறை வெளிநாடுகளுக்கு இருவரும் ட்ரிப் சென்று இருக்கிறார்கள். இந்நிலையில், அர்ச்சனா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இணையத்தைக் கலக்கும் #CMJosephVijay ஹாஷ்டேக்.. இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

அதில், அவர் த்ரிஷா குறித்தும் பேசியிருக்கிறார். அதில், த்ரிஷா தான் எப்போதும் என்னுடைய லக்கி சாம். நாங்கள் நீண்ட வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்து வருகிறோம். அவர் என்னுடைய ஃபேவரட். எங்களுக்கென்று ஒரு கேங் இருக்கிறது. கேர்ள்ஸ் நாங்க எல்லாம் சேர்ந்து அண்மையில் மொராகோ போய் வந்தோம். அப்போது, எனது பிறந்தநாள் அதனால்தான் சென்றோம். அதேபோல், ஏதாவது ஒரு ட்ரிப்பை பிளான் செய்தால், அதை கலைத்து விடுவது நானாகத்தான் இருப்பேன். திடீரென எனக்கு வேலை வந்துவிடும் என்பதால், அப்படி நடந்து விடும் அதை த்ரிஷா உள்ளிட்டோரும் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.

