Close Menu
    What's Hot

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோ.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி..!
    தமிழ்நாடு

    பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோ.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    edappadi-palaniswami-slams-cm-vijay-law-order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னையில் இளைஞர் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தவெக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.

    இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.

    மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?

    “ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!

    தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர்,

    எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்? தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?

    இந்த லட்சணத்தில், நேற்று…

    — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 2, 2026
    Edappadi Palaniswami Twitter post 2026 EPS latest political statement EPS slams CM Vijay Singappen Adhiradi Padai updates Srivaikuntam case TVK leaders Tamil Nadu Law and Order TVK government failure EPS எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு எடப்பாடி பழனிசாமி ட்வீட் 2026 சிங்கப்பெண் அதிரடிப் படை ரத்து சென்னை தண்டையார்பேட்டை கொலை வழக்கு தமிழ்நாடு அரசியல் பரபரப்பு தவெக அரசு சட்டம் ஒழுங்கு முதல்வர் விஜய் கண்டன அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Don't Miss

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    அலிஷா அப்துல்லா அளித்த அவதூறு புகாரில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.