தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நாலாயிரத்தி எழுநூத்தி அறுபத்தி ஐந்து மதுபான சில்லறை கடைகள் தற்போது, நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபடைகளில் மது வாங்குவோர் காலி மதுபான்களை கொடுத்துவிட்டு ரூபாய் பத்து திரும்ப பெரும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த பத்தாம் தேதி பதவியேற்றார். விஜயின் நேரடி கண்காணிப்பின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, கடைகளில் கூடுதல் விலையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இந்த நிலையில், அவர் பதவியேற்ற நாளிலிருந்து மது பாட்டிலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் பத்து நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 வாங்குவது நிறுத்தப்பட்டதா என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராத நிலையில், கூடுதலாக வசூல் தற்போது நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியாகவும் ரூபாய் 10 நிறுவப்பட்டு உள்ளது உற்சாகத்தையும் தருவதாக மது பிரியர்கள் தெரிவித்து வருகின்றன. பொது மக்களின் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

