Close Menu
    What's Hot

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரிந்து கிடப்பது யாருக்கு லாபம்?.. எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக சிக்னலா?
    தமிழ்நாடு

    பிரிந்து கிடப்பது யாருக்கு லாபம்?.. எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக சிக்னலா?

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sasikala-aiadmk-unity-statement-party-merger-call
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

    இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ கழகத்தொண்டர்கள், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். இயக்கத்தின் நிர்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டர்களின் நிலைமையை உணர வேண்டும்.

    சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று, இயக்கம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யார் காதிலும் விழவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. இந்த முடிவு கூட தமிழக மக்களின் நலன் கருதிதான் எடுக்கப்பட்டது.

    திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று தான் தனியாக களம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைக்கு என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

    இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லியும் வந்தேன். இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால், இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெற்று இருக்க முடியும். அதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் இன்றைக்கு புரட்சித்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், திமுகவினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இன்றைக்கு இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். இதனை இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது வெளிப்படுத்தியிருப்பது கழகத்தொண்டர்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கிறது.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயக்கத்திற்கும்,கழகத்தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும்.“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள். “ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும்…

    — V K Sasikala (@AmmavinVazhi) May 12, 2026
    AIADMK Unity EPS vs OPS Sasikala Latest News Sasikala Party Merger Tamil Nadu politics 2026 Unity is Life Sasikala VK Sasikala Statement அதிமுக இணைப்பு அதிமுக ஒற்றுமை எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வம் சசிகலா அறிக்கை சசிகலா புதிய கட்சி தமிழக அரசியல் மாற்றங்கள் வி.கே. சசிகலா பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026

    யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!

    June 26, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026
    Don't Miss

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தில் கனரக லாரி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.