தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் 234 தொகுதிகளிலும், ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?.. அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, பதவியேற்பு விழாவிற்கு கோட் சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலும் கோட் சூட் அணிந்து பங்கேற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் என் ஆனந்த் அமர்ந்துள்ளார். எதிர் திசையில் சட்டப்பேரவையில் திமுக குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.

