திமுக ஆட்சியில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக
பொறுப்பு வகித்து வந்த திப்பம்பட்டி ஆறுச்சாமி நலவாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது மேலும் குளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் மன வேதனை அடைந்த தூய்மை பணியாளர் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுப்பு உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்.. பட்டாசு வெடித்து கூட்டணியை வரவேற்ற தொண்டர்கள்..!
கடந்த 11 மாதங்களில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களுக்கு சென்று தூய்மை பணியாளர்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்கள் திமுக அரசு செய்துள்ளது குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் மேலும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாயாக
ஊதியத்தை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்கு திமுக அரசு செய்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது முக்கியமாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தோல்வி அடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தலைவர் இல்லாத இடத்தில் நான் இந்த பொருப்பில் இருக்க விரும்பவில்லை எனவே அவரது அனுமதியை பெற்று எனது பதிவியை ராஜினாமா செய்வதாக வேதனையுடன் தெரிவித்தார்.

