தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்பது உறுதியாக விட்டது. இன்னும் பெரும்பான்மைக்கு 11 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என்பதால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். இது மட்டும் இன்றி மாற்றுக் கட்சியினரின் ஆதரவை தரக்கோரி விஜய்யும் கடிதம் எழுதியுள்ளார்.

தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்..!
இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தேர்தல் நேரத்தில் கடுமையாக விமர்சித்ததற்காக, வருத்தம் தெரிவிக்கிறேன் என்று இயக்குனரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களுக்காக வருதம் வேண்டாம். நல்ல விமர்சனங்கள் இன்னும் எங்களை கூர்மைப்படுத்தும். கற்றுக் கொடுக்கும். ஆட்சியில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், தவறு இல்லை. தங்களின் இந்த மாண்பு போற்றத்தக்கது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், அதே போல் மற்றொரு இணையவாசி தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்திருந்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன். படுத்தே விட்டார் ஆனால், இப்படிப்பட்ட இழிவான செயலை தளபதி மன்னித்தாலும், தமிழக மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார். சேரனின் பதிவும் அதற்கான பதில்களும் பலருக்கு கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay , @TVKVijayHQ அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்..
— Cheran Pandiyan (@CheranDirector) May 6, 2026
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்…… pic.twitter.com/r6Qp0o6zQX

