பவள மாலை அணிவதால் கிடைக்கும் ஆன்மீக மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக, பவள மாலை ஒருவரின் வாழ்க்கையில் சிறந்த சூழலையும், நேர்மறையான பலன்களை தரக்கூடியது. அற்புத விஷயங்களை விஷயங்களை தரக்கூடிய பவள மாலை அணிவதில் நிறைய விதிகளும் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!
- உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவள மாலை அணிவதால் அதன் தாக்கத்தை குறைத்து திருமண தடைகள் நீங்கும்.
- தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பயத்தை போக்கி மன உறுதியும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் பவள மாலை உங்களுக்கு கொடுக்கிறது.

- எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களை பாதுகாத்து தீய சக்திகள் கண் திருஷ்டி மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் கவசமாக பவள மாலை செயல்படுகிறது.
- உங்களுக்கு தலைமை பண்பு, ஆளுமை திறன் மற்றும் முடிவு எடுக்கும் தெளிவை பவளம் உண்டாகுகிறது.

- கடன் சுமைகளை குறைக்கவும். பூமி சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நிலம் வீடு சேர்க்கைக்கும் பவள மாலை வழி செய்கிறது.
- பவளம் ரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. இது ரத்த சோகையை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக உதவி புரிகிறது.
- முகப்பரு, சொறி, சிரங்கு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் பவளமாலைக்கு உள்ளது.
- புதிய பவள மாலையை அணிவதற்கு முன் பசும்பால் அல்லது கங்கை நீரால் (அல்லது சுத்தமான நீரால்) கழுவி, அதன் பிறகு தூப தீபம் காட்டி முருகப்பெருமான் அல்லது அங்காரகனை வேண்டி அணிய வேண்டும்.

- தங்கம் அல்லது செம்பில் பவளத்தை பதித்து அணிவது அதன் ஆற்றலை இருமடங்காக்கும். வெள்ளியில் அணிவதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
- கால்சியம் கார்பனேட் அதிகம் உள்ளது. எலும்புகளை வலுப்படுத்தவும் மூட்டு வலிகளை குறைக்கவும் பவள மாலை உதவி புரிகிறது.
- கோபத்தை குறைத்து மன அழுத்தத்தை தரும் மனச்சோர்வையும் சோம்பலையும் நீக்கி உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க பவள மாலை பர்ஃபெக்டான மாலை.
- பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் கருப்பை தொடர்பான குறைபாடுகளை சீராகவும் பவள மாலை உதவி புரிகிறது.

- மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பவளம் மிகவும் உகந்தது.
- செவ்வாய் தசை நடப்பவர்கள் அல்லது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பவர்கள் ஜோதிட ஆலோசனைக்குப் பின் அணியலாம்.
- பவளத்தை செவ்வாய்க்கிழமை அன்று அணிவது சிறப்பு.
- உடைந்த அல்லது கீறல் விழுந்த பவளத்தை அணியக்கூடாது, அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

