சர்வதேச கார் பந்தயக் களத்தில் ‘தல’ அஜித் குமாரின் வேகம் மின்னல் வேகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H Series GT3 Pro-Am ரேஸில் 2-வது இடத்தைப் பிடித்து அஜித் குமார் மற்றும் அவரது அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ரேஸிங் களத்தில் அஜித்தின் வெற்றிப் பயணம்:
அஜித் குமார் ரேஸிங் அணி சர்வதேச தரவரிசையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளில் அஜித் தனது முத்திரையைப் பதித்துள்ளார்:
2025: இதே பெல்ஜியம் ரேஸ் டிராக்கில் 2-வது இடம்.
துபாய்: சர்வதேச போட்டியில் 3-வது இடம்.
இத்தாலி (முகெல்லோ சர்க்யூட்): 3-வது இடம் பிடித்து அசத்தல்.
பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள கார் பந்தயங்களிலும் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது.
மே 1-ல் ஏ.எல். விஜய் இயக்கிய ஆவணப்படம்:
அஜித் குமாரின் ரேஸிங் ஆர்வம் மற்றும் அவரது அணியின் பின்னணியை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் ஒரு பிரம்மாண்ட ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த ஆவணப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
சினிமா அப்டேட்: ஏ.கே. 64-ல் இணையும் ஆதிக் ரவிச்சந்திரன்!
சினிமாவைப் பொறுத்தவரை அஜித் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ‘ஏ.கே. 64′ படத்தில் நடிக்க அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என ஆதிக் தெரிவித்துள்ளார்.

