நடிகர் தனுஷ் சர்ச்சையும், அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் பழைய பேச்சு சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் கலந்துகொண்ட ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சிறுவர்களும் சிறுமிகளும் அவரது கால்களில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
யோசித்துப் பேசுங்கள்.. கங்கனா ரணவத்தின் கருத்தைக் கண்டித்த சோனு சூட்..!
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் முன்பு ஒரு மேடையில் பேசிய பழைய பேச்சு ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “நான் யாருக்காவது வாய்ப்பு கொடுத்துவிட்டு, என்னால்தான் இவர் வளர்ந்தார் என்று எப்போதும் சொல்ல மாட்டேன்” என்ற வகையில் அவர் குறிப்பிட்டிருந்த கருத்து தற்போது தனுஷைக் குறிப்பதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே இருந்த உறவு மற்றும் தற்போது இணையத்தில் எழுந்துள்ள விவாதங்கள் சினிமா வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Finally many of them understood why #Sivakarthikeyan and #Anirudh and many of his friends during 2012- 2015 had conflict and left #Dhanush
— 𝐕𝐑𝚂𝚊𝚖𝚢³ (@Vrsamy03) July 30, 2026
Everyone has self RESPECT pic.twitter.com/MMYemOBonk

