பிரபுதேவாவின் பரதநாட்டிய நடனம் குறித்து நடிகர் சஞ்சீவின் மனைவியும் நடனக் கலைஞருமான பிரீத்தி விமர்சனம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணன் அவர்களின் 100-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா, தன் குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மேடையில் பரதநாட்டியம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை?.. சர்ச்சை குறித்து வெளிப்படையாகப் பேசிய இமான்..!
பிரபுதேவாவின் இந்த நடனம் பரதநாட்டியத்தின் இலக்கண முறைப்படி இல்லை என்றும், கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுவதை மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் பாராட்டுவதாகவும் கூறி நடிகர் சஞ்சீவின் மனைவியும் நடனக் கலைஞருமான பிரீத்தி கடுமையாகச் சாடினார். பிரபுதேவா போன்ற ஒரு லெஜெண்ட் கலைஞர் இப்படிப்பட்ட தவத்தைச் செய்திருக்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக அந்த வாய்ப்பினை ஒரு புதிய வளரும் பரதநாட்டியக் கலைஞருக்குக் கொடுத்திருக்கலாம் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

