Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!
    கோவை

    பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026Updated:April 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pm-modi-coimbatore-visit-security-traffic-updates
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

    இந்நிகழ்வில் கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
    மேலும், வாகனங்களை நிறுத்த மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 2,600 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகர், நேருநகர், சிங்கநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்களான “ட்ரோன்கள்’ பறக்க விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தடையை மீறி ட்ரோன்கள் அல்லது பிற வான்வெளி ஊர்திகளைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
    பிரதமரின் வருகையையொட்டி, விமான நிலையச் சாலை மற்றும் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையப் பகுதிக்குள் தனியார் வாகனங்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பிரதமரின் வருகையையொட்டி கோவை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விமான நிலையம், சிட்ரா, கொடிசியா மைதானம் ஆகிய பகுதிகள் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Avinashi Road Traffic Diversion BJP Election Campaign Tamil Codissia Public Meeting Coimbatore Red Zone Alert Coimbatore Security Arrangements Drone Ban in Coimbatore PM Modi Coimbatore Visit அவிநாசி சாலை போக்குவரத்து மாற்றம் கொடிசியா பொதுக்கூட்டம் கோவை சிவப்பு மண்டலம் அறிவிப்பு கோவை பாதுகாப்பு ஏற்பாடுகள் ட்ரோன்கள் பறக்க தடை பாஜக தேர்தல் பிரச்சாரம் பிரதமர் மோடி கோவை வருகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.