மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொகுதி மறுவரை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்த முன் வந்திருக்கிறது. இந்த மறுவரையின் மூலம் தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்பார்ப்பு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த மசோதாவை தமிழ்நாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டுமென அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தவிர்த்து, திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ் நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் தலைமையில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது மசோதா நகலை எரிப்பது உள்ளிட்ட போராட்டங்களை திமுக முன்னெடுத்தது.
மேலும், நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் மீதான விவாதத்தை திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட ஒரு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், வாக்கெடுப்பு நடைபெற்று இருக்கிறது. தொகுதி மறுவரை மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 பேரும் வாக்களித்திருக்கின்றனர்.

அதன்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொகுதி மறு வரை மசோதா தோல்வி அடைந்துள்ளது. மோடி, தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஆகிய மசோதாக்களும் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அந்த மசோதாக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது, அமலில் உள்ளன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA!#Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 17, 2026
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன்.
தேனியும்,… pic.twitter.com/jNirpUdDRV

