Close Menu
    What's Hot

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!
    ஆரோக்கியம்

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் வந்துவிட்டாலே மார்க்கெட்டுகளில் பலவிதமான சுவையான மற்றும் நீர்ச்சத்துள்ள நிறைய பழங்களை நாம் காணலாம். சம்மர் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழம், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம் போன்றவை.

    இந்த பழங்கள் கோடை காலத்தில் தான் விலை குறைவாகவும் கிடைக்கும். நுங்கு அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நுங்கில் ஏராளமான சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றன. இந்த நுங்கு குறித்து பலரின் மனதிலும் ஒரு சில கேள்விகள் எப்போதும் இருந்தவாறு இருக்கும்.

    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits

    நுங்கு குளிர்ச்சி ஏற்படுத்துமா?

    நுங்கு குளிர்ச்சியானது மற்றும் உடல் சூட்டை தணிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அறிவியல் பூர்வமாக பார்த்தால் நுங்கு என்பது 85 லிருந்து 90% நீரால் ஆனது. எனவே, வெயில் காலத்தில் அதிகமான வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இப்படி நீர்ச்சத்து குறையும் போது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அதிக வெப்பத்தால் சருமத்தில் வெயில் கொப்பளங்கள் வரலாம். இவற்றையெல்லாம் வைத்துத்தான் உடல் சூடு பிடித்துள்ளது என்று கூறுவார்கள்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!

    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits

    இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்றால் நீச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதுதான். எந்த அளவுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு உடல் சூடு குறையும் என்று கூறப்படுகிறது. எனவே நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இதை அதிகமாக உட்கொள்ளும் போது உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். நேரடியாக உடல் சூட்டை குறைக்காவிட்டாலும் உடல் சூட்டின் அறிகுறிகளை சற்று தனிக்க கட்டாயம் நுங்கு உதவுகிறது.

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

    நாம் சாதாரணமாக சாப்பிடக்கூடிய இட்லி, தோசை மற்றும் பழங்களுடன் ஒப்பிடுகையில் மாவுச்சத்து குறைவாகத்தான் நுங்கில் இருக்கிறது. அந்த வகையில், பார்க்கும்பொழுது சர்க்கரை நோயாளிகள் ஒன்றிலிருந்து இரண்டு நுங்கை சாப்பிடலாம். அதற்காக கிலோ கணக்கில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்க தான் செய்யும். எனவே, இதனை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படலாம்.

    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits

    எடை குறைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா?

    பொதுவாக எடை குறைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். இருப்பதிலேயே கலோரி குறைவானதாக அளவு கொண்ட உணவு பொருள் என்றால் நுங்குதான் தாராளமாக நான்கிலிருந்து ஐந்து நுங்குகளை உட்கொள்ளலாம். இதனால், கலோரிகளும் மாவு சத்தும் அதிகரிக்காது, உடலில் நீர் சத்தும் அதிகரிக்கும். வயிறும் நிறையும். எனவே, உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான உணவு என்று கூறலாம்.

    மற்ற பழங்களை விட நுங்கு நல்லதா?

    நுங்கின் சிறப்பை அதில் உள்ள நீர்ச்சத்து தான் மற்றபடி பிற பழங்களை விட நிறைய சத்துக்கள் கொண்டது என்றெல்லாம் கூற முடியாது. உதாரணமாக கொய்யாப்பழத்தில் இருப்பது போல் வைட்டமின் சியோ வாழைப்பழத்தில் உள்ளது போன்றது பொட்டாசியமோ நுங்கில் காணப்படுவதில்லை. எனவே மற்ற படங்களுடன் ஒப்பிட முடியாது. ஆனால், கோடை காலத்திற்கு ஏற்ற நீர்ச்சத்து நிறைந்த மாவுசத்து குறைவான ஒரு அற்புதமான சுவையான பழம் என்று நுங்கை கூறலாம்.

    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits

    நுங்கை சருமத்தில் பயன்படுத்தலாமா?

    கோடையில் சந்திக்கும் முகப்பரு, வியர்குரு போன்றவற்றின் மீது நுங்கின் நீர் மற்றும் தசைப் பகுதியை நிச்சயம் தடவலாம். இதனால், ஓரளவு நன்மை கிடைக்கிறது என்று ஆய்வு முடிவுகளும் கூறப்படுகிறது. நுங்கில் கற்றாழை போல் அலர்சி எதிர்ப்பு பண்புகள் இல்லாவிட்டாலும், இதில் நீர் தன்மையை ஈர்த்து வைக்கக்கூடிய பண்புகள் இருப்பதால் கோடையில் சருமம் அதிகமாக வறட்ச்சி அடையாமல் இருக்க இது உதவுகிறது.

    summer-health-tips-doctor-arunkumar-nungu-benefits

    எனவே வியர்க்குரு உள்ளவர்கள் கற்றாழை அளவிற்கு பயனை தராவிட்டாலும் மிதமான அளவில் நுங்கு நல்ல பையனை கொடுக்கிறது. ஆனால், அதிகமாக தோல் வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN Now பொறுப்பாகாது.

    Benefits of Ice Apple Can Diabetics Eat Ice Apple Doctor Arunkumar Health Tips Ice Apple for Body Heat Nungu Health Benefits in Tamil Summer Food Tips Tamil Summer Health Precautions Tamil உடல் சூட்டை தணிக்க நுங்கு கோடைகால உணவு டிப்ஸ் சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா நுங்கு நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    பாட்டி வைத்தியம் இல்லீங்க இது வேட்டு வைத்தியம்.. நாம் செய்யும் உயிருக்கு ஆபத்தான தவறுகள்..!

    April 18, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!

    April 15, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Don't Miss

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    Staff Selection Commission (SSC) Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு—மொத்தம் 2,919 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கணினி வழித் தேர்வு (CBE) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.