Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்.. முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த சிவகுமார் அறிவுரை..!
    கோவை

    இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்.. முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த சிவகுமார் அறிவுரை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakumar Utv.jpg 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “நானும் இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்!” – சூலூரில் நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி : பெற்றோரை கைவிட்டால் பாவம் சும்மா விடாது என உருக்கம்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன்பாளையத்தில், வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் சுமார் 7000 சதுர அடியில் 14 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய முதியோர் காப்பகக் கட்டிடத் திறப்பு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், கத்தரிக்கோலை கையில் எடுத்தபோது “இங்கு வயதில் மூத்தவர்தான் ரிப்பன் வெட்ட வேண்டும், நான்தான் இங்கு மூத்தவன் அதனால் நானே வெட்டுகிறேன்” என நகைச்சுவையாகப் பேசி ரிப்பனை வெட்டி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அறைகளைப் பார்வையிட்ட அவர், “நானும் இங்கேயே வந்துவிடலாம் என நினைக்கிறேன், இங்குள்ள சாமியாரைப் போல இருக்கலாம் எனத் தோன்றுகிறது” எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.


    இந்த விழாவிற்கு வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் A.R. சுப்பிரமணியம் தலைமை வகிக்க, திருப்பூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு. நீறணி பவளக்குன்றன் ஜோதிக் கொடியினை ஏற்றி வைத்தார். அறக்கட்டளை பொருளாளர் அருள்நிதி. இராம அவிநாசிலிங்கம் ஜோதி வழிபாட்டை நடத்தினார். நிகழ்வில் திருமதி. M. அங்கம்மாள் A.P. முத்துசாமி, திரு. R. சரஸ்வதி ரத்தினசாமி, ராம்ராஜ் காட்டன் நாகராஜன் மற்றும் சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.


    விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சிவகுமார், “பிள்ளைகள் தாய் தந்தையரை உயிருள்ளவரை நேசிக்க வேண்டும், அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் என் அம்மாவை இறக்கும் வரை ஒரு ராணி போலத்தான் வைத்திருந்தேன். நான் கல்வி அறக்கட்டளை தொடங்கியபோது அதற்கான பணத்தை எம்.ஜி.ஆரிடம் என் அம்மாதான் கொண்டுபோய் கொடுத்தார்.

    பெற்றோரை கவனிக்காமல் விட்டால் அந்தப் பாவம் யாரையும் சும்மா விடாது. கடவுள் என்று யாரும் இல்லை, கடவுளுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது” எனத் தனது உரையில் குறிப்பிட்டார்.

    Actor Sivakumar Coimbatore District News Coimbatore Old Age Home Old Age Home Opening Sivakumar Emotional Speech Sulur News Vallalar Trust கோவை மாவட்ட செய்திகள் கோவை முதியோர் இல்லம் சிவகுமார் நெகிழ்ச்சிப் பேச்சு சூலூர் செய்திகள் நடிகர் சிவகுமார் முதியோர் காப்பகம் திறப்பு வள்ளலார் அறக்கட்டளை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.