Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவையின் காவல் தெய்வம்.. கோனியம்மன் தேரோட்டத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!
    கோவை

    கோவையின் காவல் தெய்வம்.. கோனியம்மன் தேரோட்டத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    temple UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை, பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 17 ஆம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.

    temple UTv

    தொடர்ந்து 24 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னிச்சாட்டு நடைபெற்றது. தேர் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றன. மேலும் அம்மன் ஒவ்வொரு நாளும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்மவாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை – யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். மேலும், பக்தர்கள் அங்கு உள்ள அக்னி கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு உற்சவ அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

    பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி அருகே அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வைத்தனர்.

    temple UTv

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அம்மன் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, தேரில் எழுந்து அருளினார். பின்னர் தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தேர் ராஜ வீதியில் உள்ள தேர் முட்டியில் இருந்து புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக சென்று மீண்டும் தேர் முட்டியை சென்றடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    Car Festival 2026 Tamil Nadu Coimbatore Koniamman Festival Coimbatore local news today Koniamman Kovil crowds Koniamman Temple Car Festival Koniamman Temple Ther Thiruvizha Spiritual events in Coimbatore கோவை கோனியம்மன் திருவிழா கோனியம்மன் கோவில் தேரோட்டம் தேரோட்டம் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.