கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தஷ்வந்துக்குச் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது.
இவ்வழக்கில் மேல்முறையீடு செய்த தஷ்வந்தை, போதுமான ஆதாரங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கிடுகிடுவென உயர்ந்த முட்டை விலை.. அதிர்ச்சியில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள்..!
அதனைத் தொடர்ந்து, அத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் தொடர் சட்டப் போராட்டமாக மறுசீராய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

