தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NEEC) அறிவிப்பின்படி, பண்ணைகளில் தீவன விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏற்றத்தாழ்வு மற்றும் கோடைகால/பருவநிலை மாற்றத்தால் கோழிப்பண்ணைகளில் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டை ஒன்றின் விலை 20 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகளுடன், தற்போது புரதச் சத்துக்காகப் பயன்படுத்தப்படும் முட்டையின் விலையும் உயர்வது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாத பட்ஜெட்டைப் பெரிதும் பாதித்துள்ளது.
ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.. பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள பிரம்மாண்ட வளாகம்..!
மேலும், பள்ளி சத்துணவு திட்டங்களுக்கும், பேக்கரி மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களுக்கும் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

