Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சட்டமன்றத்தில் மத அரசியலா? – தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!
    தமிழ்நாடு

    சட்டமன்றத்தில் மத அரசியலா? – தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 29, 2026Updated:August 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nainar-nagenthiran-criticizes-dmk-government-and-speaker-over-religion-in-assembly
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் – திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் சீர்குலையும் சட்டமன்ற மாண்பு! தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும்.

    ஆனால், தற்போதைய சபாநாயகர் திரு. @JCDPrabhakar அவர்கள், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார்.

    சோனியா காந்தி புத்தகத்தை வெளியிடத் தடை ஏன்? மத்திய அரசை விளாசிய மாணிக்கம் தாகூர்..!

    இது முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது. இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்.

    அமைச்சர் திரு. மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார். அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை.

    ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது. இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும்.

    எனவே, இனியாவது சபாநாயகர் அவர்களும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் – திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் சீர்குலையும் சட்டமன்ற மாண்பு!

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் திரு.…

    — Nainar Nagenthran (@NainarBJP) August 29, 2026
    BJP leader statement on religion in assembly Nainar Nagenthiran criticizes Tamil Nadu assembly speaker Nainar Nagenthiran Tamil Nadu assembly சட்டமன்ற சபாநாயகர் நடுநிலைமை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.