கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் சீமான் ‘முருகன்’ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் பரவி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷமா அல்லது நோயா? அடுத்தடுத்து இறந்த 6 காகங்கள்..!
தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரைத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் நடிக்க வைப்பது ஏற்புடையதல்ல என்றும், அவ்வாறு நடித்தால் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் இப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் முருக பக்தர்களும் ஆன்மிக அமைப்பினரும் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை சீமானின் கதாபாத்திரம் குறித்துப் படக்குழு தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

