கோவை சின்ன தடாகம் பகுதியில் மர்மமான முறையில் 6 க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் நோய் தாக்கி காகங்கள் இறந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்து காகங்களை கொன்றுள்ளனரா என வனத்துறையினர் காகங்களை பிரேத பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சின்ன தடாகம் பகுதியில் நேற்று மதியம் அங்கிருந்த ஒரு மரத்தில் இருந்து காகம் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதைப் பார்த்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது அந்த காகம் இறந்து விட்டது தெரியவந்தது.இந்த நிலையில் சிறிது நேரத்தில் அருகில் ஆங்காங்கே ஒவ்வொரு காகங்களாக இறந்து கிடந்துள்ளன. இதேபோல் அப்பகுதியில் மட்டும் 6க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்துள்ளன.
தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!
ஏதேனும் நோய் தாக்கி காகங்கள் இறந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்து காகங்களை கொன்றுள்ளனரா என வனத்துறையினர் காகங்களை பிரேத பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்மமான முறையில் 6 க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

