பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் கடந்த காலத்தில் Toxic Relationship போன்ற மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பது குறித்தும், அதனால் தான் எதிர்கொண்ட இன்னல்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தார்.
முன்னதாக, நேர்காணலில் பேசிய இயக்குனர் ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கர், அனுபமாவின் இந்தப் பேட்டியைப் பாராட்டியுள்ளார். தனது சொந்த அனுபவத்தைப் பகிர்தல் என்பது மிகுந்த தைரியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாவட்டங்களில் கொட்டப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் சொன்ன எச்சரிக்கை..!
குறிப்பாக, இதுபோன்ற வெளிப்படையான பேட்டிகள் மற்றவர்களுக்கும் (குறிப்பாகப் பல பெண்களுக்கு) தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், சரியான நேரத்தில் விழிப்புணர்வு பெறவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அதிதி ஷங்கர் தெரிவித்தார்.

