தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் மற்றும் அரசுக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய்ச் செய்தி பரப்புகிறார்கள்; என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையைக் காமெடியாகப் பார்க்கிறேன். கைதுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது, திமுகவின் கடைசித் தொண்டனும் இதற்குப் பயப்பட மாட்டான்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!
மேலும், காவிரி பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி இதை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

