கோவை மசக்காளிபாளையத்தில் கடை நடத்திவரும் வியாபாரி ஒருவர், தனது கடைக்கு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் நொடிப் பொழுதில் திருடிச் சென்றுள்ளார்.
வியாபாரியின் பரிதாப நிலையைக் கண்டு மசக்காளிபாளையம் பகுதி மக்களும், இளைஞர்களும் உடனடியாகக் களத்தில் இறங்கினர். காவல்துறையின் உதவியை எதிர்பாராமல், அப்பகுதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி காட்சிகளையும் ஒன்றாக இணைத்துத் திருடனை அடையாளம் காண உதவினார்கள்.
மக்களின் கூட்டு முயற்சியால் குற்றவாளி சிக்கியதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றது. உடனடியாகச் சிங்காநல்லூர் காவல்துறையினரும் விரைந்து செயல்பட்டு, திருடப்பட்ட வாகனத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!
இழந்த வாகனம் மீண்டும் கிடைத்ததுடன், பொதுமக்களின் மனிதநேயமும் ஆதரவும் அந்த ஏழை வியாபாரிக்கு மறுவாழ்வு அளித்தது போல் அமைந்தது. “மனிதமும், உதவியும் எங்குமே குறையவில்லை” என்பதை இந்தச் சம்பவம் கோவையில் மீண்டும் நிரூபித்துள்ளது.

