அதிமுகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டனர்.
முறைகேடாக பெறப்பட்ட சாதி சான்றிதழ் ரத்து.. அரசு விடுத்துள்ள எச்சரிக்கை..!
புதிதாக இணைந்தவர்களைத் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து அன்புடன் கட்சிக்கு வரவேற்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவும் இந்த நிகழ்வு, உள்ளூர் அரசியலில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகவும், திமுகவிற்குப் பலம் சேர்ப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

