த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பள்ளிக் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய திமுக அரசால் தொடங்கப்பட்ட “முதல்வரின் காலை உணவுத் திட்டம்” தற்போது “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேட்டிற்கு அடியில் நுழைந்து துணிகரத் திருட்டு.. பழைய இரும்பு குடோனில் அரங்கேறிய கைவரிசை..!
இத்திட்டம் ஏற்கனவே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் கூடுதலாக சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். நடப்பாண்டுக்கான விரிவுபடுத்தப்பட்ட திட்டத்திற்குத் தமிழக அரசு ரூ. 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் எஸ்சி, எஸ்டி நிதியில் கைவைக்கப்படுகிறது.

