தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கொள்முதலில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறை மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அதிகளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்துத் distilleries மற்றும் breweries நிறுவனங்களிடமிருந்தும் சமமான முறையில் கொள்முதல் செய்யும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறதா?.. முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..!
குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதைத் தவிர்த்து, சந்தையில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதியால், வழக்கமாக மதுப்பிரியர்கள் விரும்பி அருந்தும் சில குறிப்பிட்ட பிராண்டுகள் கிடைப்பதில் தற்காலிகமாகத் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், உயரக ‘எலைட்’ (Elite) கடைகளில் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யப் பிரீமியம் மற்றும் மீடியம் ரக மதுபானங்கள் கட்டாயமாக விற்பனை செய்யப்படவுள்ளன.

