மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார். அவர் ஆடைகள் ஏதுமின்றி, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென கோயிலின் குளத்திற்குள் குதித்துள்ளார். குளத்தில் குதித்த அவரை, அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. நீரில் மூழ்கி அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் குடும்பச் சூழல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், “இது திட்டமிடப்பட்ட அல்லது பிறரால் தூண்டப்பட்ட நிகழ்வாகத் தெரியவில்லை. சிசிடிவி ஆதாரங்கள் மூலம் தேஜஸ்வினி தனது வீட்டில் இருந்து வெளியேறி, குளத்திற்குச் சென்று குதித்தது வரை அனைத்தும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் இது ஒரு தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

