வியட்நாமில் நடைபெற்ற பயங்கர படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில், முதற்கட்டமாக திருச்சியைச் சேர்ந்த மூன்று நபர்களின் உடல்கள் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கோவை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் உரிய அரசு நடைமுறைகள் முடிக்கப்பட்டு, உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வியட்நாம் விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகிய மூவரின் உடல்களும் மும்பை வழியாக கோவை விமான நிலையத்தின் சரக்கு பிரிவிற்கு (Cargo) கொண்டு வரப்பட்டன. அப்போது கோவை வருவாய் கோட்டாட்சியர் நேரில் முன்னின்று உடல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
யானை தாக்கி விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. வனத்துறை அறிவுறுத்திய முக்கிய எச்சரிக்கை..!
விமான நிலையத்திற்கு உயிரிழந்த அழகுராஜாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அவரது உடலைப் பெற்றுக் கொண்டனர். அதே சமயம், விபத்தில் உயிரிழந்த ஷேக் அப்துல்லா மற்றும் பாலாஜி ஆகிய இருவரின் உறவினர்கள் கோவைக்கு நேரில் வரவில்லை. இதன் காரணமாக, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அவர்களது உடல்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் மூன்று பேரின் உடல்களும் அவர்களின் சொந்த ஊரான திருச்சிக்கு அனுப்பி வைக்கும் பணிகள் முடிந்து இதில் விமான நிலைய அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மூவரின் உடலிலும் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் சொந்த பொருள் இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது.

