இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன் மிகவும் மகிழ்ச்சியாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெற்றிமாறன் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் தீவிரமாக இருப்பவர், ஆனால் ‘அரசன்’ தளத்தில் அவர் சிரித்தபடி காணப்படுவதற்கு சிம்புவின் அர்ப்பணிப்புதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சிம்பு காட்சிகளின் தேவையை முன்கூட்டியே உணர்ந்து, பெரும்பாலான காட்சிகளை “ஒரே டேக்கில்” (Single Take) நடித்துக் கொடுப்பதால், படப்பிடிப்பு எந்தவித தாமதமும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘கட்டா குஸ்தி 2’ வசூல் வேட்டை.. மீண்டும் வெற்றி நாயகனாக விஷ்ணு விஷால்..!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் சிம்புவின் இந்தச் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார். சரியான இயக்குநரிடம் சிம்புவின் திறமை வெளிப்படும்போது, அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ‘அரசன்’ படப்பிடிப்பு ஒரு சிறந்த உதாரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி மாறன் மகிழ்ச்சியா இருக்க காரணமே என் தலைவன் தான்..
— Mr. வெட்டி (@iam_Vetti) July 5, 2026
Single take Artist nu நிரூபிச்சிட்டே இருப்பான் அதனால இனி எல்லாமே வெற்றி தான்…🕺😎🔥🔥#SilambarasanTR #Arasan https://t.co/zNvrMk8KyW pic.twitter.com/znphdn4BYM

