இயக்குநர் அட்லீ, அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழாவில் கலந்துகொண்டு பேசியது தற்போது கவனம் ஈர்த்துள்ளது. “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதையை இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்த வாய்ப்புகளால், ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என மாஸ் கமர்ஷியல் படங்களை இயக்கும் சூழல் அவருக்கு அமைந்தது. இதனால் அவரால் காதல் படங்களை இயக்க முடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் வருகைக்கான அறிகுறியா?.. மனம் திறந்து பேசிய நடிகர் விஷால்..!
மேலும், ஆகாஷ் இயக்கியுள்ள ‘இதயம் முரளி’ படம், இயக்குநரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக் என்றும், அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான வெற்றியாக அமையும் என்றும் அட்லீ பாராட்டியுள்ளார்.

