சாதம், சாம்பார், ரசம்.. இதுக்கெல்லாம் ஒரு பெஸ்ட் காம்பினேஷன் வேணுமா? அப்போ இந்த செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸை ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருள்கள்
- உருளைக்கிழங்கு
- எண்ணெய்
- கடுகு
- உளுத்தம்பருப்பு
- கடலைப்பருப்பு
- வரமிளகாய்
- பெருங்காயம்
- கறிவேப்பிலை
- வெங்காயம்
- உப்பு
- மஞ்சள் தூள்
- தேங்காய் துருவல்
- கொத்தமல்லி தழை
செய்முறை
Step 1: முதல்ல, உருளைக்கிழங்கை வேக வச்சு தோல் உரிச்சு, ரொம்ப மசிக்காம கொரகொரப்பா மசிச்சு எடுத்துக்கோங்க.
Step 2: ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு நல்லா தாளிச்சுக்கோங்க.
ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!
Step 3: பொடியா நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கிட்டு, மசிச்சு வச்ச உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நல்லா பிரட்டி விடுங்க. செட்டிநாடு வாசனையே தனி தான்.
Step 4: கடைசியா, கொஞ்சம் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையைத் தூவி இறக்குனா… அட்டகாசமான செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

