80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றினார். “லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தைக் காக்கவே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம்” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், லஞ்சம் வாங்குபவர்கள் மீது புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை அரசு கைவிடவில்லை என்பதையும், உதாரணமாக ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!
மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கோயில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருவதாகவும், மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

