வழக்கமான இட்லிக்கு மாற்றாக, மீந்து போன இட்லியை வைத்து சுவையான ‘மசாலா இட்லி’ செய்யும் எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
- இட்லி – 4 முதல் 5 (துண்டுகளாக நறுக்கியது)
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கடுகு, சீரகம், கருவேப்பிலை – தாளிக்க
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
Step 1: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
Step 2: வதங்கிய வெங்காயத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து தக்காளி தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கவும்.
பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!
Step 3: மசாலா தயாரானதும், நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலா இட்லியின் எல்லா பக்கமும் படுமாறு மெதுவாக கிளறவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான மசாலா இட்லி தயார். விருப்பப்பட்டால் கூடுதல் சுவைக்கு சிறிதளவு குடைமிளகாய் அல்லது தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

