Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!
    தமிழ்நாடு

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    manickam-tagore-slams-bjp-mgnregs-funds-cut
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியை 2000 கோடி வரை மத்திய அரசு குறைத்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,

    தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது.

    2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டைக் குறைத்து, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ₹7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் ₹2,000 கோடிக்கும் அதிகமான குறைப்பு. இதுவே போதாதென்று புதிய VB-GRAM சட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது.

    மத்திய அரசு வழங்கும் ₹7,585 கோடியைப் பயன்படுத்தவே தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ₹5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு சுமார் ₹1,000 கோடி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், இப்போது கூடுதலாக ₹4,000 கோடிக்கும் மேற்பட்ட சுமை தமிழ்நாட்டின் தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப வழங்க வேண்டிய நிதியைக் குறைத்து, அதற்கும் மாநிலத்திடமே அதிக பங்களிப்பு கோருவது எந்த வகையான கூட்டாட்சித் தத்துவம்? மொழிக் கொள்கையில் பாரபட்சம். கல்வி நிதியில் பாரபட்சம். வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்.

    தேசிய திட்ட ஒதுக்கீடுகளில் பாரபட்சம். இப்போது ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலும் பாரபட்சம். தமிழ்நாட்டில் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பிறகும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்ற பாடத்தை மோடி அரசு இன்னும் கற்றுக்கொள்ளவில்லை போல் தெரிகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    @ChouhanShivraj எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும், உண்மை எண்கள் வேறு கதையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது; அதே நேரத்தில் மாநிலத்தின் மீது நிதிச் சுமை அதிகரிக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான அரசியல் அல்ல. இது கூட்டாட்சிக்கான அரசியல் அல்ல. இது தமிழ்நாட்டை தண்டிக்கும் அரசியல்.

    தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுத்த மக்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் அரசியலுக்கு எதிராக என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதை 2029 தேர்தல் மீண்டும் நிரூபிக்கும். தமிழ்நாடு தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட… pic.twitter.com/dG3a6rIu6s

    — Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) June 11, 2026
    100 Naal Velai Thittam 2026 100 நாள் வேலை திட்டம் நிதி Central Govt Bias Against TN Congress MP Manickam Tagore Tweet Manickam Tagore MP MGNREGS Funds Cut Tamil Nadu Shivraj Singh Chouhan VB-GRAM Tamil Nadu Central Funds Issue VB-GRAM சட்டம் தமிழ்நாடு ஊரக வேலை உறுதித் திட்டம் நிதி குறைப்பு சிவராஜ் சிங் சவுகான் தமிழ்நாடு காங்கிரஸ் செய்திகள் மத்திய பாஜக அரசு பாரபட்சம் மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.