இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமராகத் திகழும் நரேந்திர மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றும் தலைவராகத் திகழும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கடந்த பத்தாண்டுகளில், லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது முதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குதல் வரை, அவரது தலைமைத்துவம் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளது.
நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!
இந்த பயணம் இன்னும் உறுதியான நோக்கத்துடன் தொடரட்டும்; இது இந்தியாவைச் சுயசார்பு கொண்ட, பசியற்ற நாடாகவும், உண்மையான உலகளாவிய சக்தியாகவும் உயர்த்தட்டும்.
My heartiest congratulations to Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji on leading India as the longest serving Prime Minister.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 10, 2026
Over the past decade, his leadership has driven transformative progress, from lifting millions out of poverty to strengthening infrastructure…
4399 நாள்களைக் கடந்து, அதிக காலம் பிரதமர் பதவியை தொடர்ந்து வகித்து மோடி அவர்கள் சாதனை: இந்தியாவை வல்லரசாக்கும் சாதனையையும் படைக்க வேண்டும்! இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி அவர்கள் படைத்திருக்கிறார்.
இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தொடர்ந்து 4398 நாள்கள் பதவி வகித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.
2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி தொடங்கி இன்று 4399 ஆம் நாளாக பிரதமர் பதவியில் தொடர்வதன் மூலம் மோடி அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார். 12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, உட்கட்டமைப்புகளையும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியது என பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிக்கு பல அடையாளங்கள் உள்ளன.
இந்தியாவை பசியும், வறுமையும் இல்லாத, அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4399 நாள்களைக் கடந்து, அதிக காலம் பிரதமர் பதவியை
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 10, 2026
தொடர்ந்து வகித்து மோடி அவர்கள் சாதனை: இந்தியாவை
வல்லரசாக்கும் சாதனையையும் படைக்க வேண்டும்!
இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய…

