பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு எஸ்பி.வேலுமணி வந்த போது நிர்வாகி ஒருவர் துரோகி என கூறியதால் சிறு பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் 15. 5.2026 அன்று காலமானார்.
அவரது, இறப்பிற்கு நலம் விசாரிக்க தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வர இருந்த நிலையில், முன்னால் அதிமுக அமைச்சரும் கொறடாவுமான எஸ்பி வேலுமணி வந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் இவர்களெல்லாம் துரோகிகள் என்று கத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

