Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முட்டை ஒன்னும் கெடாத பொருள் இல்ல.. லட்சக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்..!
    தமிழ்நாடு

    முட்டை ஒன்னும் கெடாத பொருள் இல்ல.. லட்சக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026Updated:May 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    annamalai-slams-tvk-govt-midday-meal-eggs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

    கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.

    எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை…

    — K.Annamalai (@annamalai_k) May 27, 2026

    Annamalai criticizes TVK government 2026 Cold storage egg procurement issue K Annamalai X post updates School students lunch egg quality Tamil Nadu midday meal scheme eggs Tamilnadu school education welfare news TN BJP former chief statement அண்ணாமலை எக்ஸ் தள பதிவு குளிர்சாதன கிடங்கு முட்டை சர்ச்சை தவெக அரசு அண்ணாமலை விமர்சனம் பள்ளி மாணவர்கள் முட்டை விநியோகம் மதிய உணவு திட்ட முட்டைகள் முட்டை தரம் மற்றும் ஊட்டச்சத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!

    September 16, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.