Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»234 தொகுதிகளிலும் அதிரடி எக்ஸ்-ரே.. மு.க.ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்..!
    தமிழ்நாடு

    234 தொகுதிகளிலும் அதிரடி எக்ஸ்-ரே.. மு.க.ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026Updated:May 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-strict-instructions-dmk-field-research-team-assembly-election-results-review-june-5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள்.

    எனது காதுகளாகச் செல்பவர்கள். • தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. • நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.

    கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

    நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை. டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.

    கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.

    நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும். ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!

    இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

    சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.

    இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

    • நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின்… pic.twitter.com/FeYxP1NnfE

    — M.K.Stalin (@mkstalin) May 16, 2026
    234 Constituencies Report 234 தொகுதிகள் ஆய்வு அறிக்கை 38 Member Committee Field Survey 38 பேர் குழு கள ஆய்வு Assembly Election Results Review Party Leadership Strict Warning Party Reforms Political Scan Report June 5 Tamil Nadu politics 2026 கட்சி மறுசீரமைப்பு கட்சித் தலைமை அறிவுறுத்தல் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026 தமிழ்நாடு அரசியல் செய்திகள் திமுக கட்சி மறுசீரமைப்பு திமுக கள ஆய்வு குழு தேர்தல் தோல்வி/வெற்றி ஆய்வு மு க ஸ்டாலின் அறிவுறுத்தல் ஜூன் 5 இறுதி அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.