தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க அந்த மேஜிக் எண்ணான 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னரை சந்தித்தார். அப்போது, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான அந்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் வந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் தெரிவித்திருந்தார்.
அதிமுக – திமுக கைகோர்க்கிறதா?.. நிர்மலா பெரியசாமி உடைக்கும் ரகசியத் தகவல்கள்..!
இந்நிலையில், காங்கிரஸை தொடர்ந்து CPI-யும் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவும் நிலையில், ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. CPM -ஆதரவு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

