நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
கோழி கடை டூ சட்டசபை.. திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ராம்குமார் மாஸ் வெற்றி..!
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சட்ட நிபுணர்களுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெருபான்மை நிரூபிக்க முடியாத சூழலில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக வெற்றி கழகம் தற்போது, தயாராகி வருகிறது. இந்த விவகாரம், தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் உள்ளிட்டவை குறித்து சட்ட நிபுணர்களுடன் தற்போது விஜய் ஆலோசனை செய்து வருகிறார்.

