குழந்தைகளுக்கு ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் ஆப்பிள் பர்பி காலை உணவாக கூட சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த ஆப்பிள் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு நறுக்கிய ஆப்பிள்
- அரை கப் கோதுமை மாவு
- 2 டீஸ்பூன் வெல்லம்
- ஒரு டீஸ்பூன் நெய்
- சிறிது ஏலக்காய் பொடி
- நறுக்கிய பாதாம், முந்திரி
செய்முறை
கடையிலே வாங்க மாட்டீங்க, அவ்வளவு ஈஸி.. நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி..!
Step 1: ஒரு கடாயில் நெய் விட்டு சூடாக்கி நறுக்கி ஆப்பிள் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கோதுமை மாவு மற்றும் வெள்ளம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Step 2: கலவை சிறிது குளிர்ந்த பின் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து பெரிய தட்டில் கொட்டி பறப்பி பின் சதுரங்களாக வெட்டி பரிமாறவும். அல்டிமேட் சுவையில் ஆப்பிள் பர்பி தயார்.
குறிப்பு: தேவைபட்டால் தேங்காய் சேர்க்கலாம்.

