Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை தெற்கில் அனல் பறக்கும் பிரச்சாரம்.. செந்தில்பாலாஜி கொடுத்த முக்கிய வாக்குறுதி..!
    கோவை

    கோவை தெற்கில் அனல் பறக்கும் பிரச்சாரம்.. செந்தில்பாலாஜி கொடுத்த முக்கிய வாக்குறுதி..!

    Prime ReporterBy Prime ReporterApril 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    senthil-balaji-election-campaign-coimbatore-south-minority-support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, உப்பிலிபாளையத்தில் உள்ள இமானுவேல் தேவாலயத்தில் பேராயர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.இன்று ஒரு மகிழ்ச்சியான தருணமாக இந்த நேரத்தில் நான் கருதுகின்றேன்.

    ஒரு தேர்தல் களம் என்று வருகின்ற பொழுது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நாங்கள் வாக்காளர்களை நேரிலே பார்த்து வாக்கு சேகரிக்கின்ற நிகழ்ச்சி என்பது அவருடைய இல்லங்களுக்கு செல்வது வாக்காளர்களை சந்திப்பது வாக்குகளை சேகரிப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, நாட்டினுடைய நலனில் அக்கறை கொண்டு நாம் வரக்கூடிய காலங்களில் யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதி எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில் ஒன்று சேர்ந்து இந்த சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய பேராயர்களுக்கு என்னுடைய அன்பு கலந்த நன்றி இந்த நேரத்தில் நான் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ‘குடி’ மகன்’ அட்ராசிட்டி.. நடுரோட்டில் பேட்டிங் செய்த ‘மதுப்பிரியர்’..!


    இந்த நன்றி என்பது வெறும் வார்த்தையாக அல்லாமல் வரக்கூடிய ஆண்டுகளில் செயல்பாட்டின் மூலமாக உங்களிடத்திலே உங்கள் சகோதரனாக இருந்து நிரூபித்துக் காட்டக்கூடிய ஒரு நன்றியாக இருக்கும் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு. கோவை திருமண்டலத்தினுடைய பேராயர் பேசுகின்ற பொழுது இரண்டு விஷயங்களை நான் அவரோடு பகிர்ந்து கொண்டேன்.

    சீனியரை புறக்கணித்த ஜூனியர்கள்?.. வேட்பாளர்களின் செயலால் பிளவுபடும் காங்கிரஸ்..!

    ஒன்று நம்முடைய கல்லறைத் தோட்டத்திற்கான அந்த சில பிரச்சனைகளை அரசு பொறுப்பேற்றவுடன் சிங்கிள் விண்டோ சிஸ்டம் போல, உங்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து அந்த பணிகளை நிறைவேற்றி செய்து கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. பொறுப்பு நிச்சயம். நீங்கள் எந்த அரசு அலுவலகத்திற்கும், எந்த அதிகாரிகளையும் சந்திக்க வேண்டாம். முழுமையாக நான் உங்களை சந்தித்து அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


    இரண்டாவது, நம்முடைய சர்ச்சுகள் கட்டுகின்ற பொழுது அரசினுடைய அனுமதிகளை பெறுவது மாவட்ட ஆட்சியருடைய அனுமதிகளை பெறுவதில் அங்கு இருக்கக்கூடிய சில கயவர்கள், ஒரு மனுக்களை கொடுத்துவிட்டு ஆட்சேபனை இருக்கிறது என்று நிறுத்தி வைக்கக்கூடிய சூழல் பல இடங்களிலே நடக்கின்றன. ஏன் அவர்களை கயவர்கள்னு சொல்லணும்னா அவங்களுக்கு இருக்கக்கூடிய புத்தி அவ்வளவுதான். யார் ய, என்ன செஞ்சாலும் நம்ம பட்டா இடத்துல இடம் வாங்கி, நம்ம கட்டிடங்களை கட்டுறோம். வழிபாட்டு தளங்களை உருவாக்குறோம். பக்கத்துல இருக்கிறவங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

    ஆனால் வேண்டுமென்றே அதை தடுக்கக்கூடிய நோக்கத்தில் செயல்படக் கூடியவர்களை அப்படித்தான் சொல்லி அழைக்க வேண்டும். ஆகையால் அதுபோன்ற அனுமதிகளுக்கும், உங்களுக்கு அரசிற்கும் அதிகாரிகளுக்கும் பாலமாக இருந்து அந்த அனுமதிகளையும் நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்ற உறுதியை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்த இரண்டு விஷயங்களில் தெற்கு தொகுதிகள் மட்டுமல்ல, கோவை மாவட்டம் முழுவதுமே இதில் உங்களுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கின்றேன். அந்த பணிகளை சிறப்பாக செய்து தருவேன் என்ற உறுதியை உங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியிலிருந்து வந்தாலும், வேறு எங்கிருந்து வந்தாலும், நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டினுடைய மக்களை பாதுகாக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கக்கூடிய முதலமைச்சரை நாம் பெற்றிருக்கின்றோம்.

    யார் என்ன செய்தாலும், எந்த வகையில் தாக்குதல் நடத்தினாலும், என் தாய் தமிழ்நாட்டு மக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னுடைய அரசினுடைய கடமை என்பதில் உறுதியாக இருந்து, தொடர்ந்து நம்முடைய சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்துவ மக்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள், சொல்லுகின்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    முதலமைச்சருடைய ஒரு தொண்டனாக இங்கே கோவையிலிருந்து உங்களுக்கு தேவையான பணிகளை முழுமையாக நிறைவேற்றித் தருவேன் என்ற உறுதியை மட்டும் மீண்டும் ஒருமுறை சொல்லி, இன்னும் ஒரு ஐந்து ஆறு நாட்கள் இருக்கின்றன. இந்த மீதம் இருக்கக்கூடிய நாட்களில் நம்மிடத்தில் இருக்கக்கூடிய, நம்முடைய இல்லத்தில் இருக்கக்கூடிய, குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரிடத்திலும் எடுத்துச் சொல்லி இந்த களம் என்பது. தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான களம் என்பதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.

    ஆகவே, இந்த களத்தில் வெல்ல வேண்டியது தமிழ்நாடு அணி, அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும். உங்களுடைய அனைத்து ஆதரவுகளையும் வழங்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை வைத்துககொள்கிறேன் என்று கூறினார்.


    இந்த கூட்டத்தில், சிங்காநல்லூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி, பேராயர் பிரின்ஸ் கேல்வின், பாதிரியார் ராஜா, கோவை எம்பி கணபதி ராஜ்குமார், ஆலய கமிட்டி உறுப்பினர் அறிவழகன், ஆலய செயலாளர் சந்திரன், பிஷப் பெக்‌ஷல், பாஸ்டர் ஜவஹர் சாமுவேல், பாஸ்டர் ஜான்சன், திருச்சி சாலை ஆலய செயலாளர் ஜெஏ பரமானந்தம், பொருளாளர் அருண் ஆனந்தராஜ், டிசி உறுப்பினர் காட்வின் கோவில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    DMK Election Campaign Immanuel Church Coimbatore Minority Protection Tamil Nadu Senthil Balaji Coimbatore South இமானுவேல் தேவாலயம் கோவை சிறுபான்மையினர் பாதுகாப்பு செந்தில்பாலாஜி கோவை தெற்கு திமுக தேர்தல் பரப்புரை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.