Close Menu
    What's Hot

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!
    சமையல்

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    South Indian Food Combinations Eye Health
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பூரி பிரியரா நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்கிறீர்களா ஒரே மாதிரியான கோதுமை மாவில் பூரி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா கவலையை விடுங்க. ஒரு முறை ராகி மாவில் பூரி செஞ்சு பாருங்க. இது மிகவும் சுவையாக இருப்பதோடு சத்தானதும் கூட. கோடை காலத்தில் ராகியை உணவில் தினசரி சேர்த்து வருவது உடலுக்கு நல்லது.

    தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!

    ராகி கூழ், ராகி ரொட்டி, ராகி இட்லி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ராகி பூரியை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள். திரும்பத் திரும்ப கேட்பார்கள். அதுவும் வெங்காய மசாலா இதனுடன் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    பூரிக்கு

    • ஒரு கப் ராகி மாவு
    • ஒரு கப் கோதுமை மாவு
    • சுவைக்கு உப்பு
    • தேவையான அளவு தண்ணீர்
    • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

    மசாலாவிற்கு

    • இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
    • முக்கால் டீஸ்பூன் சோம்பு
    • 3 நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • நான்கு பச்சை மிளகாய்
    • சுவைக்கேற்ப உப்பு
    • கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்
    • பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி
    • அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    • அரை டீஸ்பூன் கரம்சாலா
    • 2 டம்ளர் தண்ணீர்
    • 2 டீஸ்பூன் கடலை மாவு
    • சிறிது கொத்தமல்லி

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவு மற்றும் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அதில் உப்பு சேர்த்து கிளறி கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி மூடி வைத்து பத்து நிமிடங்கள் அதனை அப்படியே வைத்து விட வேண்டும்.

    Step 2: அதற்குள் மசாலா செய்துவிடலாம். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

    Step 3: பின்னர் அதில் சோம்பை சேர்த்து தாளித்து, நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகவும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    Step 4: பின்னர் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி இரண்டு டம்ளர் நீரை உற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனுடன் கடலை மாவு நீரை கட்டிகள் இன்றி கரைத்து அதில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மசாலாவானது கெட்டியாகவும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வெங்காயம் மசாலா தயார்.

    Step 5: இறுதியாக பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிககளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து முண்ணும் பின்னுமாக வேகவைத்து எடுத்தால் ராகி பூரி ரெடி.

    Breakfast Recipes Tamil Nadu Healthy Finger Millet Recipes Onion Masala for Poori Ragi Poori Recipe Tamil Weight Loss Ragi Dishes ராகி பூரி செய்முறை வெங்காய மசாலா செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாவூறும் ‘கிரீமி’ தயிர் சாதம் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இதோ சீக்ரெட் டிப்ஸ்..!

    April 18, 2026

    சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!

    April 17, 2026

    வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!

    April 15, 2026

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வெயிலுக்கு இதமான கம்பு கூழ்..!

    April 11, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026
    Don't Miss

    ஏப்ரல் 19: விடுமுறை நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?..

    April 19, 2026

    19 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவை. மற்ற ராசிகளுக்கான யோக பலன்கள் மற்றும் விடுமுறை நாள் ராசிபலன் இதோ.

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    April 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.