Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»தினமும் ஒரு கீரை.. எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட வேண்டும்? முழு விவரம்..!
    ஆரோக்கியம்

    தினமும் ஒரு கீரை.. எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட வேண்டும்? முழு விவரம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Greens utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கீரைகள் உடலுக்கு ஆரோக்கியமானது மிகவும் நல்லது என்று அனைவரும் அறிந்த விஷயம் தான். தினமும் ஏதாவது ஒரு கீரையை உட்கொண்டு வந்தால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால், எந்த கீரையை சாப்பிட்டால் என்ன வகையான சத்துக்கள் நமது உடலில் கிடைத்து பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    Table of Contents

    • மலச்சிக்கலுக்கு முளைக்கீரை
    • பசியின்மைக்கு அகத்திக்கீரை
    • உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்ய பருப்புக்கீரை
    • சரும நோய்களுக்கு அரைக்கீரை
    • எலும்பு வலிமைக்கு முருங்கைக்கீரை
    • மூட்டு வலியை தீர்க்கும் முடக்கத்தான் கீரை
    • சிறுநீரகப் பிரச்சினைக்கு சிறுகீரை
    • சர்க்கரை நோய் தீர்க்கும் வெந்தயக் கீரை
    • ரத்த சோகையை குணப்படுத்தும் பசலை கீரை
    • ஆஸ்துமாவுக்கு தூதுவளை

    மலச்சிக்கலுக்கு முளைக்கீரை

    Mulaikeerai utv

    ஒருவரின் உடல் நிலையில் நார் சத்துக்கள் குறைவதன் காரணமாகவே மலச்சிக்கல் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் நார் சத்து உணவுகளை போதுமான அளவு உட்கொண்டால், இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதாவது, நார்ச்சத்துக்கள் கீரையில் அதிகப்படியாக உள்ளன. குறிப்பாக, முளைக்கீரையில் இந்த சத்து இன்னும் அதிகமாக உள்ளது, மலச்சிக்கலால் சிரமப்படுபவர்கள் முளைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட இயற்கையாகவே இந்த மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    பசியின்மைக்கு அகத்திக்கீரை

    Agathi Greens utv

    அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர பசியின்மை பிரச்சனை நீங்கி நல்ல பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அகத்திக்கீரை சற்று கசப்புடன் இருப்பதால், அத்துடன் தேங்காய் துருவலை அதிகம் சேர்த்து சாப்பிடலாம்.

    உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்ய பருப்புக்கீரை

    Greens utv

    உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்கள் தினமும் பருப்பு கீரையை வாரத்திற்கு மூன்றில் இருந்து நான்கு நாட்கள் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    சரும நோய்களுக்கு அரைக்கீரை

    Greens utv

    கோடை காலத்தில் பொதுவாக சருமம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க கூடும். இந்த தோல் பிரச்சனைகளை தவிர்க்க அரைக்கீரை பெரிதும் உதவி புரிகிறது. இதற்கு இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதோடு, அதை அரைத்து சருமத்தில் தடவி வர பிரச்சினைகள் விரைவில் குணமடையும்.

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    எலும்பு வலிமைக்கு முருங்கைக்கீரை

    Greens utv

    எலும்பு தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் மற்றும் எலும்பில் பலவீனம், எலும்பு அடர்த்தி குறைவு எலும்பு தேய்மானம் போன்றவற்றிற்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. ஏனெனில், முருங்கைக்கீரை கால்சியம் சத்து இருப்பது கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளன. அதற்கு இந்த முருங்கைக் கீரையை பொரியலாகவோ, சாம்பாராகவோ சாப்பிடலாம்.

    மூட்டு வலியை தீர்க்கும் முடக்கத்தான் கீரை

    Greens utv

    கை, கால், மூட்டு வலிகளில் அதிகப்படியான பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடக்கத்தான் கீரையை உட்கொள்வது மிகவும் நல்லது. இந்த கீரையை இளம் வயதில் இருந்தே உட்கொண்டு வந்தால் வயதான காலத்தில் சந்திக்கும் மூட்டு வலியை தவிர்க்கலாம். அதற்கு இந்த கீரையை துவையலாகவோ அல்லது தோசையாகவும் சாப்பிடலாம்.

    சிறுநீரகப் பிரச்சினைக்கு சிறுகீரை

    Greens utv

    சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு ஏற்ற கீரை என்றால் அது சிறுகீரை தான். இந்த கீரை அளவில் சிறியதாக இருந்தாலும், உடலில் பெரிய அளவு மேஜிக்கை செய்யக்கூடியதாக அமைகிறது. ஆகவே, சிறுநீரகப் பிரச்சனை வரக்கூடாது எனில் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் பொரியலாகவும் அல்லது கடையலாகவோ சாப்பிடலாம்.

    சர்க்கரை நோய் தீர்க்கும் வெந்தயக் கீரை

    Greens utv

    தற்போது உள்ள காலத்தில் சர்க்கரை நோய் இல்லாத வீடுகளை சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறலாம். இப்படிப்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சென்சிட்டிவிட்டியை தூண்டவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் வெந்தயக்கீரை பெரிதும் உதவி புரியும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் அந்த வெந்தயக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

    ரத்த சோகையை குணப்படுத்தும் பசலை கீரை

    Greens utv

    பொதுவாக கீரைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதுவும் இரும்பு சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக்கீரையை உட்கொள்வது நல்லது. இந்த கீரையில் மற்ற கீரைகளை விட இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இந்த கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்தால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தசோகை குணமடையும்.

    ஆஸ்துமாவுக்கு தூதுவளை

    Greens utv

    இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற கீரை என்றால், அது தூதுவளை தான். இந்த தூதுவளையை, ரசமாகவோ, துவையலாகவோ அல்லது தோசை மாவில் அரைத்து தோசையாக சாப்பிடலாம். இப்படி வாரத்திற்கு இந்த கீரையை மூன்றிலிருந்து நான்கு முறை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்து விரைவில் குணமடையலாம்.

    Benefits of Drumstick Leaves Best Greens for Anemia Greens for Kidney Stones Greens to Cure Diseases Medicinal Benefits of Leafy Greens Ponnanganni Keerai Benefits இரத்த சோகை நீங்க கீரைகள் கீரைகளின் மருத்துவப் பயன்கள் சிறுநீரகக் கல் கீரை வைத்தியம் நோய்களைக் குணப்படுத்தும் கீரைகள் பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் முருங்கைக்கீரை நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.