Close Menu
    What's Hot

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..
    சமையல்

    பீர்க்கங்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Peerkangai Bajji UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாலை வேளையில் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று பல யோசனை தாய்மார்களுக்கு இருக்கும். அந்த வகையில், மிகவும் சுலபமாகவும் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். எப்போதும், பஜ்ஜி செய்வதாக இருந்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, ஆகியவற்றை தான் பயன்படுத்தி செய்வோம்.

    ஆனால், வேறு காய்கறிகளை கொண்டும் பஜ்ஜி செய்யலாம். அந்த வகையில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீர்க்கங்காய் இருந்தால் இதனை ஒரு முறை செய்து பாருங்கள்.

    இந்த பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும் மேலும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதுவும் கடையில் விற்கப்படும் பஜ்ஜி மாவிற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு சில பொருட்களைக் கொண்டு பஜ்ஜி மாவை தயாரித்து செய்யும் போது பஜ்ஜியின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். பீர்க்கங்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    Peerkangai Utv

    தேவையான பொருட்கள்

    • ஒரு கப் கடலை மாவு
    • ரெண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
    • ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
    • ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
    • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    • ஒரு கரண்டி இட்லி மாவு
    • சுவைக்கேற்ப உப்பு
    • தேவையான அளவு தண்ணீர்
    • கால் டீஸ்பூன் நெய்
    • ஒரு சிட்டிகை ஆப்ப சோடா
    • ஒரு பீர்க்கங்காய்
    • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    Peerkangai Bajji UTv

    Step 1:முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சத்தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்து அதனுடன் சுவைக்கு ஏற்ப உப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    Step 2:பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கைகளால் நன்கு கட்டிகள் இன்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    Step 3:பிறகு அதில் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி, அத்துடன் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    Step 4:அதன் பின்னர், பீர்க்கங்காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு மெல்லிய வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    Step 5:அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை வைத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.

    Step 6: எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு பீர்க்கங்காய் துண்டுகளையும் எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுத்தால் சுவையான மற்றும் மொறுமொறுப்பான பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.

    Crispy snack recipe Easy bajji recipe Tamil Peerkangai bajji recipe Ridge gourd bajji பீர்க்கங்காய் பஜ்ஜி ரெசிபி மாலை நேர ஸ்நாக்ஸ் வீட்டிலே பஜ்ஜி செய்வது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள நடிகை குஷ்பூ, அவர் தனக்கு குடும்பம் போன்றவர் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.